அரசியல்

காரைப் பின்னாடி நகர்த்திவைப்பதைப் பார்ப்பது அவர்களுக்கு பெரிய வேடிக்கை. அப்போது எழுப்பப்படும் எச்சரிக்கை ஓசை, ஒருவர் பின்னே இருந்து கொண்டு பார்த்துப் பார்த்து, “வரலாம், வரலாம்” என்று கூறுவது, ஓட்டுனர் கவனமாக நாலாபுறமும் பார்த்து மெதுவாக வருவது, பின்னர் சக்கரத்தைத் திருப்பித் திருப்பி முன்னும் பின்னும் நகர்த்துவது, எல்லாமே வேடிக்கைதான். நமக்கு இது ஒன்றுமில்லாத விடயம். அவர்களுக்கு அப்படி இருக்காதாயிருக்கும். இரண்டு மூன்று பேர் சில விதிமுறைகளை, ஒரு protocol-ஐ ஏற்படுத்திக் கொண்டு, தங்களுக்குள் ஒத்துழைத்து செய்து முடிப்பது அந்தச் சின்னஞ்சிறு மனிதர்களின் உள்ளங்களைக் கிளர்த்தி இருக்க வேண்டும். அவர்கள் இதைப் போலச்செய்து விளையாடினார்கள். ஒருவன் காற்றில் ஸ்டியரிங்கைத் திருப்புவான். ஒருவன் பின்னால் இருந்து கொண்டு வரலாம், வரலாம் என்பான். கார் எழுப்பும் எச்சரிக்கை ஒலியும் உற்சாகமாக வாயிலிருந்து எழும்பும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்